சைவ சமய திருபணி செய்தல்

மண்ணில் புதைந்த மற்றும் வெட்டவெளியில் காணப்படும் பழமையான சிவலிங்க திருமேனியை மீட்டு வழிபாட்டுக்கு கொண்டுவருதல்

பழமையான சிவ ஆலயங்களில் மூன்று கால பூஜைகள் தடையில்லாமல் நடைபெற உதவி செய்தல்

63 நாயன்மார் களுக்கு குருபூஜை வருடந்தோறும் செய்தல் அல்லது பொருள் உதவி பண உதவி செய்து பூஜைகள் தடையில்லாமல் நடக்க உதவி செய்தல்

அனைத்து சைவசமய திருக்கோவில்களிலும் உழவாரப் பணி செய்தல்

சிவனடியார்களுக்குமாகேஷ்வர பூஜை செய்து அன்னம்பாலிப்பு செய்தல் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தல்

சைவசமய பாடசாலை அமைத்தல்

14 சாத்திரங்கள், 12 தோத்திரங்கள், சைவ சித்தாந்தம் மற்றும் திருமுறைகளைச் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்துதல், பாடசாலை அமைத்தல்

இல்லங்கள் தோறும் பன்னிரு திருமுறை பாராயணம் செய்தல் , திருவாசகம் முற்றோதல் செய்தல் மற்றும் திருக்கோவில்களில் பன்னிரு திருமுறைகளை குழுவாகப் பாராயணம் செய்தல்

கைலாய வாத்தியம் (சிவ வாத்தியம்) போன்றவை கற்றுத் தரப்படும்

தமிழ் முறைப்படி திருமணம், புதுமனை புகுவிழா, வளைகாப்பு, பெயர் சூட்டுதல், பூப்புநன்னீராட்டு விழா, திருக்கோயில் குடமுழுக்கு நிகழ்வு மற்றும் சைவம் சார்ந்து அனைத்து நிகழ்வுகளுக்கும் நடத்தித் தரப்படும்

சிவனடியார்களின் நலம் பேணுதல்

நலிவுற்ற சிவனடியார்கள் (ஆண் பெண் இருபாலரையும்) பாதுகாத்தல், சுயதொழில் செய்வதற்கு வழிவகை செய்து தருதல் மற்றும் கைவிடப்பட்ட வயதில் மூத்த சிவனடியார்களைப் பாதுகாக்க மடம் அமைத்தல்

சிவனடியார்களுக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவ உதவி செய்தல்

274 சைவத்திருத்தல யாத்திரை

தேவாரப்பாடல் பெற்ற 274 சைவத் திருத்தலங்களுக்கு மக்களை அழைத்துச்சென்று திருக்கோவிலின் பழமை மற்றும் வரலாறு அதன் மகத்துவத்தை அறிவித்தல்

அதில் பாடல்பெற்ற மற்றும் வைப்புத் தலங்கள், அது சார்ந்த அனைத்து சிவாலயங்களுக்கும் திருத்தல யாத்திரை அழைத்துச் செல்லுதல்

கோவை மாவட்டத்தை தலைமையாகக்கொண்டு இத்திருக்கூட்டம் சைவ சமயப் பணிகளைச் செய்து கொண்டு வருகிறது

பழமையான பாடல்பெற்ற சிவாலயங்களின் சிறப்புகளையும் வரலாற்றையும் மக்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்தல்

சிவனடியார்களுக்கும் பொதுமக்களுக்கும் 12 திருமுறைகளையும் 14 சாத்திரங்களையும் முறையாகக் கற்பித்துச் சான்றிதழ் வழங்குதல்



சிவபூஜை திட்டம்

சிவபூஜை செய்வதற்கு வழிவகை செய்ய மற்றும் சமயதீக்கை, சிவதீக்கை செய்வதற்கு முறையான ஆசிரியரைக் கொண்டு வேள்வி கற்பித்தல்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்கள் மூன்று கால பூஜை நடக்க ஏற்பாடு செய்ய

+918807912922 / +917200877166 / +917708672712 / +919884440027 என்ற எண்ணை அழைக்கவும்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே.

பத்தாம் திருமுறை - திருமந்திரம்



News & Events
Stay updated with Menmai Kol Saivaneethi Sivanadiyargal Thirukkoottam