நமது மேன்மை கொள் சைவநீதி சிவனடியார்கள் அறக்கட்டளை சைவசமய பாடசாலை அமைத்து பெதுமக்களுக்கு சைவசித்தாந்தின் தத்துவங்கள் மற்றும் நெறிமுறைகள் அளித்தல், சைவத்திருபணிகள் முழுமையாக செயல்படுதல் திருமுறைகள் பாரயணம் செய்ய ஊக்குவித்தல் சைவ தமிழர்களின் கலை மற்றும் பாரம்பரியம் பண்பாடு ஆகியவற்றை விளக்கி பொதுமக்களுக்கு அது சாம்மந்தமான கல்வி அளித்தல் சிவனடியார்கள் மற்றும் ஏழைகள் ஆதரவு அற்றவர்களுக்கு சுயதொழில் தொடங்க உதவுதல் பயிச்சி அளித்தல் சைவசமய மகத்துவத்தை வாழ்வியல் முறையாக்கி போரின்பநிலையை அடையச்செய்தல்.
சைவ சமயம் சார்ந்த சட்டபூர்வ வழிகளில் பயணம் செய்தல்
அரசியல் சாராது இயங்குதல்
சைவ சமயம் சார்ந்த அனைத்து அநீதிகளையும் எதிர்த்து நீதியை நிலைநாட்ட செய்தல் இந்திய அரசு சட்டத்திட்டகளுக்கு உட்பட்டு சைவ சமயத்தை நிலைப் படுத்துதல்
நமது அறக்கட்டளையின் பொருப்பு பெற்ற அடியார்கள் மற்ற அடியார்களிடத்தில் அன்புடனும் பக்தியுடனும் செயல்பட வேண்டும்
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
என்ற வாக்கியத்தை மையமாக கொண்டு சைவ சமையத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்று அனைத்து மக்களும் சிவயேக சித்தி பெற்று பிறப்பு இறப்பு இல்லா நிலையை அடையச்செய்ய வேண்டும்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே..
என்ற திருமந்திரத்தின்படி
உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.
இறைவன் ஒருவன் தான்
நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்தால், இறப்பே கிடையாது.அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்தால், இறப்பே கிடையாது.
என்ற தத்துவத்தின் படி வாழ்வதே நமது நோக்கமாகும்
சிவா திருச்சிற்றம்பலம்